குறுந்தொகை: பாடல் 1

குறுந்தொகை முதல் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/2/20251 min read

குறிஞ்சி செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை கழல்தொடி சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. தோழி கையுறை மறுத்தது.

  • திப்புத்தோளர் பாடல்

காந்தட்டே; தட்டு( தட்டு +ஏ) தட்டையான அடிப்பகுதியும் தட்டின் விளிம்புப் பகுதி சற்று உயர்ந்தும் இருக்கும் வட்ட வடிவமானது தட்டு. காந்தள் மலரின் வடிவத்தைக் குறிக்கும் நோக்கில் இச் சொல்லைப் பயன்படுத்தியுள்ள புலவரின் நுட்பமான சொல்லாட்சி சிறப்புக்கும் வியப்புக்கும் உரியது. இலக்கிய வகையைக் கண்டறிவது எப்படி? பாடுபொருள், வடிவம் (பாவகை), உத்தி (முறைமை) ஆகியவற்றுள் எவையேனும் ஒன்றின் பலவற்றின் துணைகொண்டு இலக்கிய வகையை இனங்கண்டு கொள்ளலாம். பின்வருவனவற்றை அகப்பொருளுக்குரியனவாகக் குறிக்கலாம்.

1. சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாத மரபு.

2. முதல் கரு உரி ஆகியவற்றை உள்ளடக்கிய எழுதிணை மரபு.

3. தனித்தனிப் பாடல்களாகப் பாடப்படுதல்; ஒரே புலவரால் ஒரு திணைக்குரிய பாடல்கள் அனைத்தும் பாடப்பெற்றிருப்பினும் (ஐங்குறுநூறு, கலித்தொகை ) நிகழ்ச்சித் தொடர்பு இன்மை.

4. நாடக வழக்கும் உலகியல் வழக்கும் பாடல் சான்ற புலனெறி வழக்கும் உடையவை; எனவே அறக்கழிவுடையன அவற்றுள் இடம் பெறுவதில்லை.

5. மாடனும் பற்றியது.

6. அகமாந்தர் கூற்றில் அமைவது.

7. உள்ளுறை உவமம், இறைச்சி ஆகிய புலப்பாட்டு நெறி களை மிகுதியும் போற்றுவது.

இங்ஙனம் பாடுபொருளும் பாடல் முறைமையும் இணைந்த ஓர் கூட்டு வடிவம் அகப்பொருளாகும். எனவே அகப்பொருள் என்பது ஓர் இலக்கியவகை எனத் தெளியலாம்.

குறுந்தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்(று)

இத்திறத்த எட்டுத்தொகை

என்னும் வெண்பாவில் நல்ல குறுந்தொகை எனச் சிறப்பிக்கப்பட்டிருக்கும் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ; தொகுப்பித்தவர் பெயரைக் காலமும் கரையானும் தின்று விட்டது.

குறுந்தொகையில்

  • நான்கு அடி முதல் எட்டடி வரை உள்ள பாடல்கள் உள்ளன.

  • பாடல்கள் 401; பாடிய புலவர்கள் 205 பேர் என்கிறது சாந்தி சாதனாப் பதிப்பு.

முதன் முதலில் ஏட்டுச் சுவடியிலிருந்து / பனை ஓலையிலிருந்து / காகிதத்துக்குக் கடத்தியவர்: குறுந்தொகை மூலமும் புத்துரையும் என்னும் பெயரில் பதிப்பித்தவர் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கன், பதிப்பித்த ஆண்டு 1915.

அகப்பொருள் பற்றிய விரிவான விளக்கத்திற்கு காண்க தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் - ஒரு வரலாற்றுப் பார்வை. ஒலி உரை : முனைவர் த. வசந்தாள்

Video Courtesy:

Copyright free Background Videos : Video by Freepik

IBC Tamil Youtube Channel (Sengathal Malar)