குறுந்தொகை: பாடல் 160

குறுந்தொகை 160 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,

தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்

கையற நரலும் நள்ளென் யாமத்துப்

பெருந் தண் வாடையும் வாரார்;

இஃதோ தோழி! நம் காதலர் வரவே?

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, ''வரைவர்'' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது.

மதுரை மருதன் இளநாகன்

நெருப்பு - அன்றிற் சேவல்'தலை' (ஆகுபெயர்)

இறவு - இறா மீன்

நெருப்பின்,இறவின் - 'இன்' - சாரியை

கொடு வாய் - வளைந்த அலகு

தடவு - தடா மரம்

தடா - தடவு (தடா - தட - தடவு)

நரலும் - ஒலிக்கும்

நள்- ஒலிக்குறிப்புச் சொல்

நன்றி : http://tamil concordance.in