குறுந்தொகை: பாடல் 360

குறுந்தொகை 360 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து

அறியான் ஆகுதல் அன்னை காணிய,

அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,

வாரற்கதில்ல-தோழி!-சாரல்

பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல்

உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே

சிலம்பின் சிலம்பும் சோலை

இலங்கு மலை நாடன் இரவினானே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது

மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

படர் - நினைந்து,துன்புறுதல்

ஏனல் - தினைக்கதிர்

குளிர் - கிளி கடி கருவி

சிலம்பு - மலை

சிலம்பும் - ஒலிக்கும்

வேலன் புனைந்த வெறி அயர் களம் (குறுந்.53:3)

வெறி அயர் களம் (குறுந்.318:3)

நன்றி - http ://tamil concordance.in