குறுந்தொகை: பாடல் 3

குறுந்தொகை மூன்றாம் பாடலின் பொருள், ஒலி உரை மற்றும் விளக்க குறிப்புகள்.

KURUNTHOHAI

T Vasanthal

1/3/20251 min read

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

தேவகுலத்தார்

ஐம்பூதங்களுள் நெருப்பு, காற்று தவிர ஏனைய மூன்றும் தலைவனின் நட்புக்கு எல்லையற்று விரிகிறது.அவற்றில் நிலத்தினும் வானினும் நீரினுள் ஆகியவற்றுள் உள்ள -இன் என்பது விட என்னும் பொருள் தந்து நிற்கின்றது.