குறுந்தொகை: பாடல் 4

குறுந்தொகை நான்காம் பாடலின் அகப்பொருள் மற்றும் விளக்க உரை.

KURUNTHOHAI

T Vasanthal

1/4/20251 min read

நெய்தல்

நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே

இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த நம் காதலர்

அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது .

காமம்சேர்குளத்தார்

நோம் என் நெஞ்சே என்பதில் எழுவாய். 'என்' என்பதை முதலில் எடுத்து - என் நெஞ்சு நோம் - எனப் பொருள் கொள்ள வேண்டும்.

தலைவன் பிரிவு நோய் செய்கிறது.ஆனாலும் அவர் சால்பு அந்த நோய்க்கு மருந்தாகும் தன்மையது.எனவே பிரிவின் கொடுமையை தலைவன் தண்ணளி என்னும் நீரால் அவித்து ஒருவாறு ஆற்றுவேன் என்கிறாள் தலைவி - பொ.வே.சோ.உரை

Attributions:

Sky Image : Image by brgfx on Freepik