குறுந்தொகை: பாடல் 5
குறுந்தொகை ஐந்தாம் பாடலின் இலக்கிய விளக்கம் மற்றும் ஒலி உரை.
KURUNTHOHAI

நெய்தல்
அதுகொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தூம் நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
நரிவெரூஉத்தலையார்
பிரியாமல் உடன் இருக்கும் தலைவனைப் பிரிந்தான் எனக் கருதுவது காம நோய் படுத்தும் நாடு ஆகும்.
காண்க (குறள் 1127).
வதி குருகு- வினைத்தொகை
புலம்பு -நெய்தல் நிலம்
புலம்பு :ஆகு பெயர்
