குறுந்தொகை: பாடல் 10

குறுந்தொகை 10ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/10/20251 min read

மருதம்

யாய் ஆகியளே விழவு முதலாட்டி;

பயறு போல் இணர பைந் தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.

தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

ஓரம்போகியார்

விழவு முதலாட்டி

தலைவன் செல்வம் பெற்ற மகிழக் காரணமாய் இருப்பவள்- உ.வே.சா .உரை

விழாவிற்கு முதன்மையை ஆளும் தன்மை உடையவள் - பொ.வே.சோ.உரை