குறுந்தொகை: பாடல் 11
குறுந்தொகை 11ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச்
சொல்லியது.
மாமூலனார்
பொருள்
கோடு -சங்கு
ஈர்தல் -அரிதல்
இலக்கு -விளங்கு
நெகிழ -கழல்/கழலுதல்
பாடு -பொருந்துதல்/உறக்கம் இன்றி
கலிழும் -கலங்கி அழும்
புலம்பி -தனித்து
இவண் -இங்கு
உறைதல் -தங்குதல்
உய்தல் தப்புதல்
முனாது -முற்பட/ முன்னே இருக்கின்ற
முனை -பகைப்புலம்
குல்லை -பச்சிலை/ கஞ்சங்குல்லை
உம்பர் -அப்புறம்/வேங்கட மலைக்கு அப்பால் உள்ளவர்
மொழி பெயர் தேஎத்தர் -தமிழ் அல்லாத வேறு மொழி வழங்கும் நாடு
சூழ்ந்திசின் -எண்ணினேன்/நினைத்தேன்
