குறுந்தொகை: பாடல் 12

குறுந்தொகை 12ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/12/20251 min read

பாலை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்

பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே

எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்

மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.

தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச்

சொல்லியது.

மாமூலனார்

பொருள்

கோடு -சங்கு

ஈர்தல் -அரிதல்

இலக்கு -விளங்கு

நெகிழ -கழல்/கழலுதல்

பாடு -பொருந்துதல்/உறக்கம் இன்றி

கலிழும் -கலங்கி அழும்

புலம்பி -தனித்து

இவண் -இங்கு

உறைதல் -தங்குதல்

உய்தல் தப்புதல்

முனாது -முற்பட/ முன்னே இருக்கின்ற

முனை -பகைப்புலம்

குல்லை -பச்சிலை/ கஞ்சங்குல்லை

உம்பர் -அப்புறம்/வேங்கட மலைக்கு அப்பால் உள்ளவர்

மொழி பெயர் தேஎத்தர் -தமிழ் அல்லாத வேறு மொழி வழங்கும் நாடு

சூழ்ந்திசின் -எண்ணினேன்/நினைத்தேன்