குறுந்தொகை: பாடல் 13
குறுந்தொகை 13ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கபிலர்
மாசு - அழுக்கு
கெழீஇய - கழுவுதல்
பெயல் - மழை
இரும்பிணர் - கரிய சருச்சரை சொரசொரப்பான
துறுகல் - சிறிய கல்பாறை
பைதல் - குளிர்ச்சி
ஒருதலை - ஒருபக்கம்
சேக்கும் - தங்கும்
நன்றி
(http:// http://tamil concordance.in)
