குறுந்தொகை: பாடல் 148
குறுந்தொகை 148 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
''கார் அன்று'' என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது.
இளங்கீரந்தையார்
கிண்கிணி - சதங்கை
சீரடி - சிறிய அடி
காலை - காலம்
நன்றி
