குறுந்தொகை: பாடல் 15
குறுந்தொகை 15ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது.
ஔவையார்
பறை -மணப்பறை
பணிலம் -சங்கு
ஆர்த்தல்- ஒலித்தல்
இறை - தங்குதல்(மணவினை நிகழ்த்தும் பொருட்டு)
தொல் -பழைய
மூது/முது -மூத்த/வயதான
பொதியில் -பொதுஇடம்/மன்றம்
சேயிலை -சிவந்த இலை
வாய் -வாய்மை
ஆய்- அழகு
கழல் ஆடவர் காலில் அணியும் அணிகலன்
வாய் -வாய்மை
விடலை- பாலை நிலத் தலைவன்
