குறுந்தொகை: பாடல் 16

குறுந்தொகை 16ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/16/20251 min read

பாலை

உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்

பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,

உகிர் நுதி புரட்டும் ஓசை போல,

செங் காற் பல்லி தன் துணை பயிரும்

அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?

பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது

பாலைபாடிய பெருங்கடுங்கோ

உள்ளுதல்- நினைத்தல்

கள்வர்- ஆறலைப்போர்

பொன் -இரும்பு

பகழி- அம்பு

செப்பம் -செம்மை

கொண்மார்- கொள்ளும் பொருட்டு

உகிர்- நகம்

நுதி -நுனி

புரட்டுதல்- கோடிய நுனியை நேர் செய்தல்

அங்கால் - அங்கு+ஆல்(அசை)/அம்+ஆல்(அழகிய கால்)