குறுந்தொகை: பாடல் 17

குறுந்தொகை 17ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/17/20251 min read

குறிஞ்சி

மா என மடலும் ஊர்ப; பூ எனக

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;

மறுகின் ஆர்க்கவும் படுப;

பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.

தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல் கூறியது.

பேரெயின்முறுவலார்

மா -குதிரை

மடல் -பனை மட்டை

குவிதல்- கூம்புதல்

முகிழ் -அரும்பு

கண்ணி -தலையில் சூடும் மாலை

மறுகு -தெரு

காழ் -வயிரம்

ஆர்த்தல்-ஆரவாரித்தல்

காமம் காழ்கொள்ளுதல்- காமம் முதிர்தல்

குவிதல் - கூம்புதல்

சங்க அக இலக்கியத்தில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்பு உடைய பாடல்கள்:

குறுந்தொகை: 14,17,32,173,182.

நற்றிணை: 146,152,220,342,377.

கலித்தொகை: 58,61,138,139,140,141.