குறுந்தொகை: பாடல் 18

குறுந்தொகை 18ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/18/20251 min read

குறிஞ்சி

வேரல் வேலி வேர் கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினோரே? சாரல்

சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.

கபிலர்

வேரல் -சிறு மூங்கில்

வேர் -மூலம்/பலாமரத்தின் அடிப்பகுதி

கோள்- குலை

சாரல் -மலைப்பக்கம்

செவ்வி -சரியான நேரம்

மதி -அசைச்சொல்

கோடு -கொம்பு

தூங்கல் -தாழ்தல்/தணிந்து கிடத்தல்

தவ -உரிச்சொல்