குறுந்தொகை: பாடல் 19

குறுந்தொகை 19ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/19/20251 min read

மருதம்

எவ்வி இழந்த வறுமையர் பாணர்

பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று

இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து

எல்லுறும் மௌவல் நாறும்

பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது

பரணர்

எவ்வி -மிழலைக் கூற்றத்துத் தலைவன்

புல் என்றல்- பொலிவு இழத்தல்

இனை -வருந்துதல்

மதி -முன்னிலை அசை

எல் -ஒளி

மௌவல் - முல்லை/மரமல்லி

மனைமரம் - மனைக்கு அருகில் உள்ள மரம்,முல்லைக்கொடி படர்ந்த மரம்/மரமல்லி மரம்

நாறுதல்- மணத்தல்

பல் -பல

எவ்வி பற்றிய குறிப்புகள் ஒன்பது இடங்களில் உள்ளன.

அவை:

அகநானூறு

115:8,126:13,266:11,366:12

குறுந்தொகை

19:1

புறநானூறு

24:18, 202:14,233:5,6

நன்றி

http:// tamil concordance.in