குறுந்தொகை: பாடல் 20

குறுந்தொகை 20ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/20/20251 min read

பாலை

அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,

பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக!

மடவம் ஆக, மடந்தை, நாமே!

செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கோப்பெருஞ்சோழன்

அருள் - இரக்கம்

அன்பு - காதல்

துறந்து - பிரிந்து

வயின் - ஏழாம் வேற்றுமை உருபு

உரவு -அறிவு / வலிமை

மடம் - அறியாமை