குறுந்தொகை: பாடல் 21
குறுந்தொகை 21ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ''கார்'' எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, ''அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?'' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், ''கானம் அவர் வரும் கார்காலத்தைக் காட்டிற்றாயினும் யான் இது கார் காலமென்று தேறேன், அவர் பொய் கூறாராகலின்’ எனத்தான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.
ஓதலாந்தையார்
வண்டு படுதல் -வண்டு மொய்த்தல்
ததைந்த -நெருங்கிய
கொடி இணர் -நீண்ட பூங்கொத்து
இடைஇடுபு- இடைஇடையே
புனைதல் -ஒப்பனை செய்தல்
இழை -அணிகலன்
கட்டுதல் -கைசெய்தல்
கதுப்பு -கூந்தல்
கானம் -காடு
கார் -கார்காலம்
யானோ -ஓகாரம் பிரிநிலை
தேரேன்- நம்ப மாட்டேன்
பொய் வழங்கலர் -பொய் சொல்ல மாட்டார்
