குறுந்தொகை: பாடல் 22

குறுந்தொகை 22ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/22/20251 min read

பாலை

நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,

யாரோ பிரிகிற்பவரே?-சாரல்

சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து

வேனில் அம் சினை (படம் - மஞ்சள் கடம்பு) கமழும்

தேம் ஊர் ஒண்ணுதல்! நின்னொடும், செலவே.

செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

சேரமான் எந்தை

வார்தல் ஒழுகுதல்/வடிதல்

இவண்- இங்கே

சாரல் சிலம்பு -மலைப்பக்கத்து உள்ள தாழ்வரை

வலம்சுரி- வலப்பக்கம்

மராஅம் -கடம்ப மரம்

வேனில் -கோடைக்காலம்

சினை -கொம்பு

கமழ்தல் -மணத்தல்

தேம் -வாசனை/நறுமணம்/இனிமை/தேன்/தேனீ

ஒளிநுதல்- ஒளியுடை நெற்றி