குறுந்தொகை: பாடல் 23
குறுந்தொகை 23ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது.
ஔவையார்
அகவன் மகள்- அழைக்கும் மகள்/பாடும் மகள்
மனவு- சங்குமணி
கோப்பு -கோவை
பாட்டே- ஏகாரம் பிரிநிலை
