குறுந்தொகை: பாடல் 24
குறுந்தொகை 24ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.
பருவம் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது
பரணர்
யாணர்- புது வருவாய்
கொல்லோ(கொல்+ஓ) - ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்
ஓ-அசைநிலை
அதவம் -அத்தி
குளிறு- நண்டு
கல் -ஒலிக்குறிப்பு
அவ்வே -அவையே
