குறுந்தொகை: பாடல் 26

குறுந்தொகை 26ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/26/20251 min read

குறிஞ்சி

அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை

மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை

பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன்

தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,

தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே-

தேக்கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்

வரை ஆடு வன் பறழ்த் தந்தைக்

கடுவனும் அறியும், அக் கொடியோனையே.

நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, ''இஃது எற்றினான்ஆயிற்று?'' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,''தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம் என்று கூறக் கேட்டு தோழி அறத்தொடு நின்றது.

கொல்லன் அழிசி

கருங்கால் - வலிய தாள்/கரிய தாள்

தோகை - மயில் (ஆகுபெயர்)

தேக்கொக்கு - மாமரம்

மேக்கு எழு பெருஞ்சினை - ஓங்கி வளர்ந்த பெரிய கிளை