குறுந்தொகை: பாடல் 27
குறுந்தொகை 27ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
வெள்ளிவீதியார்
உக்காஅங்கு - சிந்தியது போல
பசலை - காமநோய் கொண்ட மகளிர் மேனியில் உண்டாகும் நிற வேறுபாடு
உணீஇயர் - வினையெச்சம்
திதலை - தேமல்
மாமை - மாந்தளிர் நிறம்
கவின் - அழகு
