குறுந்தொகை: பாடல் 28
குறுந்தொகை 28ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்
ஓரேன் யானும் ஒர் பெற்றி மேல் இட்டு
ஆஅ, ஒல் எனக் கூவுவேன்கொல்
அலமரல் அசைவளி அசைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
ஔவையார்
ஓரேன் -என்ன செய்வது என்று அறியேன்
ஆஅ -இரக்கக்குறிப்பு
ஒல்- ஒலிக்குறிப்பு
கூவுதல் -உரக்கக் கூப்பிடுதல்
அலமரல் -சுழற்சி
அலைப்ப - வருத்த
அசைவளி -வாடைக்காற்று
உயவு நோய் -வருத்தும் நோய்
துஞ்சும் -தூங்கும்
