குறுந்தொகை: பாடல் 29
குறுந்தொகை 29ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், ''இவர் எம்மை மறுத்தார்'' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது.
ஔவையார்
நல்உரை -இரவுக்குறி வர உடன்படுதல்
புல்உரை -இரவுக்குறி மறுத்தல்
தாஅய் -பரவுதல்
பெயல்நீர் -முகில் துளிர்க்கும் மழை நீர்
பசுங்கலம் -சுடப்படாத மண்பாத்திரம்
பெறினே -பெற்றால்
