குறுந்தொகை: பாடல் 31

குறுந்தொகை 31ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

மள்ளர் குழீஇய விழவினானும்,

மகளிர் தழீஇய துணங்கையானும்,

யாண்டும் காணேன், மாண் தக்கோனை;

யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த

பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.

நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது.

ஆதிமந்தி

மள்ளர் -போர் மறவர்

குழுஇய -குழுவிய,கூடிய

தழீஇய- தழுவிய

விழவு -சேரி விழா

மாண் தக்கோன் - தகுதி உடையவன், மாட்சிமைப்பட்டவன்

_________________________

த.வசந்தா,

சங்க இலக்கியத்தில்

-----------------------------------------

மனிதநேயம்,

------------------------

சென்னை:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,இரண்டாம் பதிப்பு, xii+164=176பக்கம்,2014 ,(2013)

-------------

துணங்கை(13 முறை)

துணங்கைக்கு(1)

துணங்கையாய் (1)

துணங்கையானும்(1)

துணங்கையுள்(2)

நன்றி

( http://Tamil concordance.in)