குறுந்தொகை: பாடல் 32
குறுந்தொகை 32ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே.
பின்நின்றான் கூறியது.
அள்ளூர் நன்முல்லையார்
