குறுந்தொகை: பாடல் 34

குறுந்தொகை 34ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,

தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,

இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே

முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு

அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்

குட்டுவன் மரந்தை அன்ன எம்

குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.

வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.

கொல்லிக் கண்ணன்

ஒறுத்தல் - தண்டித்தல், இகழ்தல் ,துன்புறுத்தல்

ஓவலர்- நீங்காதவர்கள்

தேறல் -தெளிதல்

தமியர் -தனியர்

முனாஅது - முன்னே

தோடு - கூட்டம்

யானையங்குருகு- வண்டாழ்ங்குருகு (வண்டு+ஆழ்+குருகு)/ வண்டலில் கால் ஊன்றி நிற்கும் குருகு,

அட்ட மள்ளர் - பகைவரை அழித்த/கொன்ற வீரர்

தோடு - தொகுதி

குட்டுவன் - குட்ட நாட்டை உடைய மன்னன்/சேரன்

தலைவியின் அழகுக்கு புலவர்கள் தங்களைப் புரந்தவர்களின் நாடு நகரங்களை உவமையாகச் சுட்டுதல்:

குறுந்தொகை 238:4,258:7+100:5-6

ஐங்குறுநூறு 56:2,171:3

அகநானூறு 376:17-18,396:19,+61:15-18

&

களிமயில்/குஞ்சரக்குரல குருகொடு ஆலும்(அகநானூறு145: 14-15)

http://tamil concordance.in