குறுந்தொகை: பாடல் 35
குறுந்தொகை 35ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
நாண் இல மன்ற என் கண்ணே, நாள் சேர்பு
சினைப் பசும் பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழிதுளி தலைஇ
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது.
கழார்க் கீரன் எயிற்றி
இல- இல்லை
மன்ற - உறுதியாக
சினை - கருப்பம்/சூல்
கனைத்த- திரண்ட/பருத்த
கூம்பு - குவிதல்
பொதி -அரும்பு/
மலர்ப் பொதி
நுண் உறை- சிறு தூற்றல்
அழிதுளி - மிக்க துளி
தலைஇய -பொருந்திய/கூடிய/பெய்த
கரும்பு (24 முறை)
கரும்பின்(35)
கரும்பினும்(1)
கரும்புக்கு (1)
கரும்பே(1)
கரும்பொடு(1)
கரும்பொடு(1)
நன்றி
