குறுந்தொகை: பாடல் 36

குறுந்தொகை 36ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

துறுகல் அயலது மாணை மாக் கொடி

துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,

நெஞ்சு களன் ஆக, ''நீயலென் யான்'' என,

நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்

தாவா வஞ்சினம் உரைத்தது

நோயோ-தோழி!-நின் வயினானே?

''வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்'' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது.

பரணர்

துறுகல் -பொற்றைக்கல்

மாணை -ஒரு‌ காட்டுக்கொடி

மாக்கொடி -பெரிய கொடி

களன் -இடம்

நீயலென் -பிரியேன்

மற்று -அசை

தாவா -நல்ல

வஞ்சினம் -சூளுரை/உறுதிமொழி