குறுந்தொகை: பாடல் 37
குறுந்தொகை 37ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி! அவர் சென்ற ஆறே.
தோழி, ''கடிது வருவர்'' என்று, ஆற்றுவித்தது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
களைஇய -களைய/தீர்க்க
வேழம் -களிறு
யாஅம் -மரம்
பொளித்தல் -உரித்தல்
