குறுந்தொகை: பாடல் 38
குறுந்தொகை 38ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது.
கபிலர்
அறை -பாறை
வெயில் -வெய்யில் என்பதன் விகாரம்
வாழி -முன்னிலை அசை
ஓராங்கு -ஒரு படியாக/ஒன்று போல்/ இடைவிடாமல்
தணப்ப -பிரிய
துறுகல் 23 முறை
அல்லது 23 முறை
மாணை ஒரு முறை
இவரும் 7 முறை
குறுந்தொகை 36:2,260: 1,364:8.
நற்றிணை 38:9
அகநானூறு 171:1
பரிபாடல் 16:27
மலைபடுகடாம் 90.
