குறுந்தொகை: பாடல் 39

குறுந்தொகை 39ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

''வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை, அருஞ் சுரம்'' என்ப நம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே.

பிரிவிடை ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்கு, ''யாங்ஙனம் ஆற்றுவேன்?'' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது.

ஔவையார்

வெந்திறல் -சுடுகின்ற ஆற்றல்/பாலைநிலக் காற்று

கடுவெளி -விரைந்து வீசும் பெருங்காற்று

பொங்கர் -மரக்கொம்பு

நெற்று -முதிர்ந்த காய்

அருமை -கடத்தற்கரிய நிலம்

முனிநர் -வெறுத்தவர்

உழிஞ்சில் -வாகை மரம்