குறுந்தொகை: பாடல் 40
குறுந்தொகை 40ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், ''பிரிவர்'' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது.
செம்புலப்பெயனீரார்
யாய் -என் தாய்
ஞாய் -நின் தாய்
யாராகியர் -யாராம் தன்மை
எந்தை -என் தந்தை
நுந்தை -நின் தந்தை
கேளிர் -உறவினர்
