குறுந்தொகை: பாடல் 41

குறுந்தொகை 41 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,

சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;

அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்

மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்

புலப்பில் போலப் புல்லென்று

அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.

பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

அணிலாடு முன்றிலார்

உழையர் -உடன் உறைபவர்

சாறு -விழா

புகல்வேன் -மகிழ்வேன்

மன்ற -உறுதியாக

அத்தம் -கடினமான பாதை/அரிய வழி

நண்ணிய -இருக்கின்ற

புலப்பில் -புலப்பு+இல், தனிமையில் உள்ள வீடு

அலப்பென்- வருந்துவேன்

அணில் (4முறை)

குறுந்தொகை 41:4,49:1

புறநானூறு 246:4,307:4

வரிப்புற அணிலொடு பெரும்பாண் ஆற்றுப்படை 85

http:// tamil concordance.in