குறுந்தொகை: பாடல் 42
குறுந்தொகை 42 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது
கபிலர்
காமம்- மெய்யுறு புணர்ச்சி
கருவி -தொகுதி
விடரகம்- முழைஞ்சு
விடர் -நிலப்பிளப்பு, மலைப்பிளப்பு,மலைக்குகை,மலைச்சரிவில் ஏற்பட்ட பிளப்பினால் ஆகிய குகை
இயம்புதல் - ஒலித்தல்
