குறுந்தொகை: பாடல் 43

குறுந்தொகை 43 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

''செல்வார் அல்லர்'' என்று யான் இகழ்ந்தனனே;

''ஒல்வாள் அல்லள்'' என்று அவர் இகழ்ந்தனரே:

ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,

நல்அராக் கதுவியாங்கு, என்

அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.

பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது.

ஒளவையார்

ஒல்வாள் அல்லள்- உடன்படமாட்டாள்

இருபேர் -இரண்டு பேர்/இருவர்

ஆண்மை- ஆளுந்தன்மை

பூசல்- பிரிவுத்துன்பம்

நல் அரா- நல்ல பாம்பு

கதுவுதல்- கவ்வுதல்/கடித்தல்

அலமலக்குறுமே- சுழலும்/அலைமோதும்