குறுந்தொகை: பாடல் 44
குறுந்தொகை 44 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது
வெள்ளிவீதியார்
பரி -செலவு/சீரான நடை
தப்புதல் -மாட்டாவாதல்
வாள் -ஒளி
மன்ற -தேற்றமாக
