குறுந்தொகை: பாடல் 45
குறுந்தொகை 45 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், ''எல்லினன் பெரிது'' என,
மறுவரும் சிறுவன் தாயே;
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது
ஆலங்குடி வங்கனார்
பண்ணி -ஒப்பனை செய்து
தழீஇய- தழுவல் பொருட்டு
மல்லல் -மிகுதி/செல்வம்
மல்லல் ஊரன் மருத நிலத் தலைவன் (மல்லல் வளனே தொல்.உரியியல்)
எல்லினன் - வழக்கம் உடையவன்
மறுவருதல்- கலங்குதல்/மயங்குதல்/சுழலுதல்
தெறுவது- துன்பம் தருவது
ஆலங்குடி வங்கனார்
குறுந்தொகை 8,45
நற்றிணை 230,330,400
அகநானூறு 106
புறநானூறு 319
