குறுந்தொகை: பாடல் 46

குறுந்தொகை 46 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ

முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து

எருவின் நுண் தாது குடைவன ஆடி,

இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்

புன்கண் மாலையும், புலம்பும்,

இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே?

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.

மாமிலாடன்

சாம்பல் -பூவாடல்/ஒடுக்கம்

குரீஇ -குருவி

முன்றில் -முற்றம்

உணங்கல்- தானியங்கள்/கூலங்கள்

மாந்தி -தின்று

நுண்தாது -நுண்ணிய துகள்

இறைப்பள்ளி (இறப்பு தாழ்வாரம்)-இறப்பில் உள்ள குருவியின் கூடு/சேக்கை/உறைவிடம்