குறுந்தொகை: பாடல் 47

குறுந்தொகை 47 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்

இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை நெடு வெண்ணிலவே!

இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது.

நெடுவெண் நிலவினார்

கருமை -வன்மை

கால் -அடிமரம்

வேங்கை -மரம்

வீ -பூ (அரும்பு மொட்டு முகை மலர் அலர் வீ செம்மல்)

எல்லி- இரவு

வேங்கை மரத்தின் நறும்பூவையும் புலியையும் இணைத்துச் சுட்டும் அகப்பாடல்கள்:

ஐங்குறுநூறு 396

குறுந்தொகை 47

நற்றிணை 389

அகநானூறு 12,141, 227,228