குறுந்தொகை: பாடல் 48

குறுந்தொகை 48 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

''தாதின் செய்த தண் பனிப் பாவை

காலை வருந்தும் கையாறு ஓம்பு'' என,

ஓரை ஆயம் கூறக் கேட்டும்,

இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்

நன்னுதல் பசலை நீங்க, அன்ன

நசை ஆகு பண்பின் ஒரு சொல்

இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?

பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது.

பூங்கணுத்திரையார்

ஓம்பு -பாதுகாத்தல்/பேணுதல்/காப்பாற்றுதல்

இனை -வருத்தம்

உழக்கும் -வருந்தும்

நன்னுதல்- அன்மொழித்தொகை

பசலை- மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் வருவதொரு நிற வேறுபாடு

அன்ன நசை -அத்தகைய விருப்பம்

கையாறு -செயலற்று இருத்தல்