குறுந்தொகை: பாடல் 49

குறுந்தொகை 49 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து

மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!

இம்மை மாறி மறுமை ஆயினும்.

நீ ஆகியர் எம் கணவனை;

யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது

அம்மூவனார்

கொங்கு -பூந்தாது

முண்டகம்- கழிமுள்ளிச்செடி

மணி- நீலமணி

கேழ் -நிறம் /கருமை

கணவனை- கணவன்+ஐ(சாரியை)

நேர்பவள் -ஒத்தவள்