குறுந்தொகை: பாடல் 50
குறுந்தொகை 50 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது.
குன்றியனார்
ஐயவி -வெண் சிறுகடுகு
சிறு வீ -சிறிய பூ
செவ்வி -அழகிய/எழில் மிக்க
மருது - மருத மரம்
செம்மல்-வாடற்பூ
தாஅய்-பரந்து/பரவி
துறை- நீராடும் துறை
அணிந்தன்று-அழகு செய்தது
இறை-முன்கை
நெகிழ-தளர/தளர்கை/கழல
சாஅய்-மெலிந்து
புலம்பு -தனிமை
