குறுந்தொகை: பாடல் 52
குறுந்தொகை 52 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே?
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது.
பனம்பாரனார்
ஆர் - சத்தம்
களிறு - ஆண்யானை
சிலம்பு - மலை
சூர் - மலையுறை தெய்வம்
குவை - தொகுதி , திரள் திரட்சி
இறை - சிறிது சிறிது/ கொஞ்சம் கொஞ்சம்
