குறுந்தொகை: பாடல் 53
குறுந்தொகை 53 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
எம் அணங்கினவே மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல்,
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,
நேர் இறை முன்கை பற்றி
சூரர மகளிரோடு உற்ற சூளே.
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது
கோப்பெருஞ்சோழன்
முன்றில் - முற்றம்
நனை முதிர் புன்கு - அரும்பு அற மலர்ந்த/முதிர்ந்த மலர்கள்
வான் பொரி - வெண்மையான பொரி
எக்கர் - இடுமணல்
