குறுந்தொகை: பாடல் 54
குறுந்தொகை 54 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
மீனெறி தூண்டிலார்
ஈண்டு - இங்கு
நலன் - தலைவியின் அழகு/கவின்
கவண் - கல்லை எறியப் பயன்படுத்தும் கருவி/கல் எறி கருவி
பசுங்கழை - மூங்கில்
மீன்எறி தூண்டில் - மீன் விட்ட தூண்டில்
கானகநாடன் - குறிஞ்சி நிலத்தலைவன்
ஆண்டு - அங்கு
