குறுந்தொகை: பாடல் 55
குறுந்தொகை 55 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம இச் சிறு நல் ஊரே.
“வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்'' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.
நெய்தல் கார்க்கியர்
மாக்கழி - பெரிய கடற்கழி
மணிப்பூ - நெய்தற்பூ
மணி - நீலமணி
தூ - தூவுதல் தூத்துத்துவலை
மங்குல் - மேகம்
தைஇ - அணிந்து
தைவரல் - தடவுதல்
ஊதை - வாடைக்காற்று
உறையுட்டு - உறையுளை உடைத்து/ தங்க முடியும்
சின்னாட்டு - சிலநாள்
(பிதிர்த்துவலை - இருபெயரொட்டு..)
