குறுந்தொகை: பாடல் 56

குறுந்தொகை 56 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்

குளவி மொய்த்த அழுகற் சில் நீர்

வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,

வருகதில் அம்ம, தானே;

அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!

தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி, இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது.

சிறைக்குடி ஆந்தையார்

கிளைத்தல் - தோண்டுதல்

மிச்சில் - உண்டு எஞ்சியது

குளவி - காட்டுமல்லிகை

(இங்கு சருகுக்கு ஆகுபெயர்)

மொய்த்தல் - சருகு உதிர்ந்து மூடுதல்

சின்னீர் - சிறிய அளவு நீர்

வருகதில் - தில் - விழைவுப்பொருள்+ஒழியிசைப்பொருள்

அம்ம - கேள்( தலைவன் நெஞ்சு)

நன்றி

http://tamil concordance.co.in