குறுந்தொகை: பாடல் 57

குறுந்தொகை 57 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன

நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்

பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,

உடன் உயிர் போகுகதில்ல கடன் அறிந்து,

இருவேம் ஆகிய உலகத்து,

ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள்

தோழிக்குச் சொல்லியது

சிறைக்குடி ஆந்தையார்

மகன்றில் - நீர்ப்பறவை

தண்டாக்காமம் - துய்த்து அமையாத காமம்

உடன்- பிரிவு நிகழ்ந்த பொழுது

புன்மை - சிறுமை

தில் - விழைவுப்பொருள்

உயல் - தப்புதல் / உய்தல்

நன்றி

http://tamil concordance.co.in